என்னைப் பற்றி

எனது படம்
I am an Engineer retired from government service. I am fond of writing poems and short stories in Tamil

ஞாயிறு, 11 ஜூன், 2023

எண்ண அலைகள்

 கந்தன்!

தாக்கும் பிணிகள் தடுத்தென்னை நோயின்றிக்                                                                      காக்கும் கடவுளாம் கந்தனே – யாக்கின்ற                                                                                 பாக்க(ள்) அனைத்தும் பழுதின்றி நீயமைக்க                                                                   ஏக்கமுடன் காத்திருப்பேன் ஏற்று!        

தமிழ்!
16 சீர் விருத்தம் ! (காய்,காய்,காய்,மா)
உடலியக்கும் நல்லுயிரே உத்தமியே தமிழே/ ….உலகத்தின் உயிர்வாழும் மூத்தமொழி நீயே!/ ஊரெங்கும் உனைப்பேசும் உண்மை நிலைமாற்றி/ ….உலுத்தர்கள் வேற்றுமொழி பேசுவதும்ஏனோ?/
கடல்கடந்த நாடுகளில் கரையொதுங்கி வாழ்வோர்/ ….கண்மணியாம் உன்பிள்ளை மறந்தாரா உன்னை?/ காலங்கள் கடந்தபோதும் கைவிடவே மறுத்து/ ….கண்ணுக்குள் உனைவைத்துக் காத்திடவே செய்தார்!/
சுடரொளியாம் சூரியனைத்தான் மறந்து நிலவே ....சுடரென்று நம்புமொரு கூட்டமொன்றும் இங்கே சோற்றுக்கு வேற்றுமொழி கற்கின்றேன் என்று ….சொந்தமொழி மறந்துவிட்ட சொரணையற்ற கூட்டம் நடந்துவந்த உன்பாதை நானெண்ணிப் பார்த்தேன்! ….நல்லபல இலக்கியங்கள் இலக்கணங்கள் கண்டு நாளெல்லாம் மலைத்தேனே! அந்தமலைத் தேனை ….நான்சுவைத்தே நானுனக்குச் சொல்லுகிறேன் நன்றி!

~~செல்லமுத்துபெரியசாமி                                                                                    ~

1 கருத்து: