என்னைப் பற்றி

எனது படம்
I am an Engineer retired from government service. I am fond of writing poems and short stories in Tamil

புதன், 14 பிப்ரவரி, 2024

 

கவிச்சோலை!-படத்துக்குக் கவிதை25/1/18

*********************************************

கண்ணாடியால் செய்தசிறு

........கோளங்களே-உம்மைக்

கண்டதும் நினைவிலாடுதெம்

.........இளமைக்காலங்களே!

கால்சட்டைப் பையில்

.........போட்டால் ஓசைவரும்

நிறையச்சேர்க்க

.........இன்னும் ஆசைவரும்!

குண்டாட்டத்துக்கென்று

..........ஒருஅணியுண்டு- பையில்

குண்டோடு எப்போதும்

...........அலைவதுண்டு!

குறிபார்த்து அடித்திடக்

...........கிடைத்திடும் வெற்றி!

அறியாதவயதில் அது

...........ஒலிம்பிக் பதக்கம்!

இப்படியும் ஒரு கோரிக்கை

.......... உண்டுஒலிம்பிக்கில்

குண்டாட்டம் சேர்க்கப்பட

...........வேண்டு மென்று!

************************************

செல்லமுத்து பெரியசாமி

சனி, 3 பிப்ரவரி, 2024

அழகு நாச்சியம்மன் கோவில் வரலாறு

 வள்ளியறச்சல் அழகு நாச்சியம்மன் கோவில், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம் வெள்ளகோவில் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் அம்மனைப் பொன் அழகு நாச்சியம்மன் எனும் பெயரிலும் பார்ப்பது அழகு நாச்சியம்மன் எனும் பெயரிலும் அம்மனுக்கு சொர்ணாம்பிகை என்ற பெயர் ஏற்பட்டது. அப்பெயரே பொன்னழகு நாச்சியம்மன் என்ற பெயராக மாறியதாக கூறப்படுகிறது. இங்கு கோயில் கொண்டுள்ள அம்மன் பெயர் பொன்னழகு நாச்சியம்மன் 12. ஆலய வரலாறு துவாபர யுகத்தில் பொன் உடுப்பு சிவனை பூஜித்ததால் இவ்வூர் சொர்ணபுரம் என்ற அழைக்கப்பட்டது. சொர்ணம் எனறால் பொன் என்று பொருள். அதனால் அம்மனுக்கு சொர்ணாம்பிகை என்ற பெயர் ஏற்பட்டதாக 1807 ஆம் ஆண்டு எழுத்தப்பட்டுள்ள ”சொர்ண அழகு நாச்சி அம்மன்” என்ற ஆவணம் கூறுகிறது. அப்பெயரே பொன்னழகு நாச்சியம்மன் என்ற பெயராக மாறியதாக கூறப்படுகிறது 2. மேற்கோள்கள் அம்மன்

சனி, 22 ஜூலை, 2023

 

Daily an apple keeps the doctor away.எனபது ஆங்கிலத்தில் ஒரு பழமொழி அல்லது சொலவடை. இதைப் பரீட்சித்துப் பார்க்க முடிவு செய்தேன். வீட்டில் நிறைய ஆப்பிள் பழங்கள் வாங்கி வைத்துக் கொண்டு தினமும் தவறாமல் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தேன். இப்படியாக ஒரு இரண்டு மாதம் கழிந்திருக்கும், ஒரு நாள் என்மகள்,”அப்பா நான் மதுரை போனபோது எழுதினேனே அந்த என்ட்ரன்ஸ் ரிசல்ட் வந்திருக்கிறது. சும்மா படிக்காமத்தான் எழுதினேன். ஆனா நல்ல மார்க் வந்திருக்குது!” என்று சொன்னாள். மேலும் “கோயம்புத்தூர் அரசுக் கல்லூரியிலேயே நல்ல சீட் கிடைக்கும். சேர்ந்து கொள்ளவா?” என்று கேட்டாள். “சரி!” என்று சொன்னேன். ஒருவாரம் கழித்து, “கார்டியாலஜி கிடைக்கல ஆங்காலஜி கிடைச்சுது எடுத்துக்கிட்டேன்.” என்றாள். “சரி! பரவாயில்லை!” என்றேன். “அங்கேயே ஹாஸ்டலில் தங்க வேண்டும்! வாரத்துல ஒரு நாள் மட்டும் தான் வரமுடியும்!” என்றாள். “சரி குழந்தைகளை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம். நீ படிப்பைக் கவனி!” என்றேன். கற்பதற்கு வயது தடையில்லை! அவள் சேர்ந்திருப்பது DM (oncology). அது சரி! “Daily an apple keeps the doctor away.” என்ற பழமொழி சரிதான் என்று எண்ணிக்கொண்டேன். உண்மையிலேயே நான் சாப்பிட்ட ‘தினம் ஒரு ஆப்பிள்’ வேலை செய்துவிட்டது!. It kept Doctor (my daughter) away from me.  

ஞாயிறு, 16 ஜூலை, 2023

 

24/01/2023அன்று எழுதியது!

எப்படிக் கடந்தன எழுபது ஆண்டுகள்?
~~என்பதே எனக்குப் புரியவில்லை!
தப்படி ஒவ்வொன்றும் நிதானமாய்த்
~~தானெடுத்துக் கடந்து வந்தேன்!
இப்படி இப்படித்தான் வாழ்க்கை என்பதில்
~~இம்மியும் பிசகாது இருந்தேன்!
அப்படி இப்படிக் கொஞ்சம் வாழ்ந்திருந்தால்
~~இன்னும் அழகாய் இருந்திருக்குமோ?
இப்படியு மொருசபலப் புத்தி என்மனத்தில்
~~அப்பப் போதலைகாட்டி யதுமுண்டு!

இப்போது தான்பணி நிறை(வு) எய்தியதுபோல்
~~எப்படிப் பறந்தன பன்னிரண்(டு) ஆண்டுகள்
இப்போதும் வியப்பாய் மனத்தில் விரிகிறது!
~~தப்பாது சொல்வேன் தமிழன்னை யவள்தான்
எப்போதும் துணையாய் இருந்து வந்ததால்
~~என்னுள் நிலையாய் நிம்மதி சிறக்கிறது!
முப்பால் தந்த வள்ளுவன் திருக்குறள்
~~முன்னெனை நடத்திச் சென்றதும் புரிகின்றது !

~~செல்லமுத்து பெரியசாமி

செவ்வாய், 4 ஜூலை, 2023

விதி வலியது

 

“விதி வலியது”

   விதியின் வலியது வேறில்லை யென்றாலும்        மதியதன் துணையாலே மாற்ற முயன்றால்                  விதியது புறமுது கிட்டோடும்வெற்றியதுன்              மிதியடியில் வந்து விரைவாய் வீழும்!  

வெற்றிக்குச்சூத்திரமாம் விடாமுயற்சி கடுமுழைப்பு நெற்றியதில்  எழுதியதை அதுவே மாற்றும்!   தடைகளையும் உடைத் தெறியும் உன்பக்கப்            படையாய் மாற்றும் தந்திரத்தைச் சொல்லித்தரும்!                                                                                                             டையிலே வந்திடலாம் தோல்விகள் பலவும்  இடையூறாய்   எண்ணிடாது படியாய்க் கொண்டு      படைநகர்த்தி முன்னேறு வெற்றி நோக்கி!                  கடைசியிலே வெற்றிக்கனி வந்து சேரும்!                     ~~செல்லமுத்து பெரியசாமி                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             

 

 

ஞாயிறு, 2 ஜூலை, 2023

 விருத்தமாயிரம் கவித்துவப் பயிற்சி

(மா மா காய், மா,மா,காய்)

தாய்மையைப் போற்றுவோம்!

பலதும் உறவு இருந்தாலும்                                          ~~பக்கத் துணையாய் நிற்பதுவும்                                  நலமாய் நாமும் வாழ்வதிலே                                ~~நாட்டம் மிகவே கொண்டதுவும்                      நிலத்தில்  வாழும் உறவினிலே                                ~~நிம்மதி நமக்குத் தருவதுவும்                               உலகில் நமது கண்முன்னே                                     ~~உலவும் தெய்வம் தாய்தானே!

தாய்மை ஒன்றே உலகினிலே                             ~~தனித்து நிற்கும் உறவாகும்!                              தூய்மை உண்மை நல்லொழுக்கம்           ~~துணிவைக் கற்றுக் கொடுப்பாளே!              வாய்மை வழியில் நாம்நின்று                               ~~வாழும் வகையைக் கற்பிப்பாள்!                     தாய்மை என்னும் தூய்மையான                    ~~தகவைப் போற்றி வணங்கிடுவாய்!      

உற்ற தெய்வம் எப்பொழுதும்                          ~~உன்னோ டிருக்க முடிவதில்லை!                         பெற்ற தாயை நமக்காகப்                                  ~~பெரிதும் உவந்து படைத்தானே!                    மற்றோர் தெய்வம் தேவையில்லை                  ~~மறக்கா தவளைத் தொழுவாயே!                        பற்றை வைப்பாய்  அவள்மீதில்                            ~~பாதம் பணிந்து வணங்கிடுவாய்!            

சனி, 1 ஜூலை, 2023

 

கல்வி

தீக்குச்சி கொண்டு தீபமும் ஏற்றலாம்                                                                                  ~~தீபத்தின் ஒளியில் திருக்குறள் படிக்கலாம்!                                                                  ஆக்கவழி அறிந்து அறிவினைப் பெருக்கலாம்                                                                     ~~அனைவர்க்கும் கற்ற கல்வியைப் பகிரலாம்!                              சாக்கடைக்குள் வீசும் சந்தனம் மணக்குமா?                                                                       ~~சரியான இடத்தில்  சேர்தலே பொருத்தமாம்                                                                          யாக்கையது அழியும் வரையிலும் உடன்வரும்                                                    ~~யாவருக்கும்   தருமே குறையிலா   நலமெலாம்