தொடுதூரத்தில்
வானம்!
பட்டுவரும்
தோல்வியெலாம் காலில் ~~படிக்கல்லாய் ஆக்கிநட முன்னே! கொட்டியிங்கே கிடக்கின்ற வாய்ப்பைக் ~~கொண்டுவிடு
ஊன்றுகோலாய்ப் பற்றி! தொட்டுவிடும் தூரத்தில் வானம் ~~தொடர்முயற்சி சாதிக்கும் எதையும்! எட்டிவிடும் தூரத்தில் வெற்றி! ~~ஏணிகளாய் காலடியில்
தோல்வி!
படுத்துகிற
தோல்வியினைப் பார்த்து ~~பயந்துவிட வேண்டாமே தம்பி! அடுத்தடுத்து வருகின்ற தோல்வி ! ~~அத்தனையும் அனுபவமே உனக்கு!
கொடுத்திடுவாய் முழுமுயற்சி அனைத்தும் ~~கொண்டுவிட்ட காரியத்தில் முனைந்து! எடுதெறிந்து தயக்கத்தை நீயும் ~~ஏறிடுவாய்
சிகரத்தை நோக்கி!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக