தமிழின் சிறப்பு!
16 சீர் விருத்தம் ! . (காய்,காய்,காய்,மா)உடலியக்கும் நல்லுயிரே உத்தமியே தாயே! ….உலகத்தின் உயிர்வாழும் மூத்தமொழி நீயே!/ ஊரெங்கும் உனைப்பேசும் உண்மைநிலை மாற்றி/ ….உலுத்தர்கள் வேற்றுமொழி பேசுவதும் ஏனோ?/
கடல்கடந்த நாடுகளில் கரையொதுங்கி வாழ்வோர்/ ….கண்மணியாம் உன்பிள்ளை மறந்தாரா உன்னை?/ காலங்கள் கடந்தபோதும் கைவிடவே மறுத்து/ .கண்ணுக்குள் மணியாகக் காத்திடவே செய்தார்!
சுடரொளியாம் சூரியனைத்தான் மறந்து / ....சுடரென்று நம்புமொரு கூட்டமொன்றும் இங்கே/ சோற்றுக்கு வேற்றுமொழி கற்கின்றேன் என்று/ ….சொந்தமொழி மறந்துவிட்ட சொரணையற்ற கூட்டம்!/
நடந்துவந்த உன்பாதை நானெண்ணிப் பார்த்தேன்!/ ….நல்லபல இலக்கியங்கள் இலக்கணங்கள் கண்டு/ நாளெல்லாம் மலைத்தேனே! அந்தமலைத் தேனை/ நான்சுவைத்த நானுனக்கு நவில்கின்றேன் நன்றி!/ .
~~செல்லமுத்துபெரியசாமி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக