என்னைப் பற்றி

எனது படம்
I am an Engineer retired from government service. I am fond of writing poems and short stories in Tamil

ஞாயிறு, 16 ஜூலை, 2023

 

24/01/2023அன்று எழுதியது!

எப்படிக் கடந்தன எழுபது ஆண்டுகள்?
~~என்பதே எனக்குப் புரியவில்லை!
தப்படி ஒவ்வொன்றும் நிதானமாய்த்
~~தானெடுத்துக் கடந்து வந்தேன்!
இப்படி இப்படித்தான் வாழ்க்கை என்பதில்
~~இம்மியும் பிசகாது இருந்தேன்!
அப்படி இப்படிக் கொஞ்சம் வாழ்ந்திருந்தால்
~~இன்னும் அழகாய் இருந்திருக்குமோ?
இப்படியு மொருசபலப் புத்தி என்மனத்தில்
~~அப்பப் போதலைகாட்டி யதுமுண்டு!

இப்போது தான்பணி நிறை(வு) எய்தியதுபோல்
~~எப்படிப் பறந்தன பன்னிரண்(டு) ஆண்டுகள்
இப்போதும் வியப்பாய் மனத்தில் விரிகிறது!
~~தப்பாது சொல்வேன் தமிழன்னை யவள்தான்
எப்போதும் துணையாய் இருந்து வந்ததால்
~~என்னுள் நிலையாய் நிம்மதி சிறக்கிறது!
முப்பால் தந்த வள்ளுவன் திருக்குறள்
~~முன்னெனை நடத்திச் சென்றதும் புரிகின்றது !

~~செல்லமுத்து பெரியசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக