Daily an apple keeps the doctor
away.எனபது ஆங்கிலத்தில் ஒரு
பழமொழி அல்லது சொலவடை. இதைப் பரீட்சித்துப் பார்க்க முடிவு செய்தேன். வீட்டில் நிறைய
ஆப்பிள் பழங்கள் வாங்கி வைத்துக் கொண்டு தினமும் தவறாமல் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தேன்.
இப்படியாக ஒரு இரண்டு மாதம் கழிந்திருக்கும், ஒரு நாள் என்மகள்,”அப்பா நான் மதுரை போனபோது
எழுதினேனே அந்த என்ட்ரன்ஸ் ரிசல்ட் வந்திருக்கிறது. சும்மா படிக்காமத்தான் எழுதினேன்.
ஆனா நல்ல மார்க் வந்திருக்குது!” என்று சொன்னாள். மேலும் “கோயம்புத்தூர் அரசுக் கல்லூரியிலேயே
நல்ல சீட் கிடைக்கும். சேர்ந்து கொள்ளவா?” என்று கேட்டாள். “சரி!” என்று சொன்னேன்.
ஒருவாரம் கழித்து, “கார்டியாலஜி கிடைக்கல ஆங்காலஜி கிடைச்சுது எடுத்துக்கிட்டேன்.”
என்றாள். “சரி! பரவாயில்லை!” என்றேன். “அங்கேயே ஹாஸ்டலில் தங்க வேண்டும்! வாரத்துல
ஒரு நாள் மட்டும் தான் வரமுடியும்!” என்றாள். “சரி குழந்தைகளை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம்.
நீ படிப்பைக் கவனி!” என்றேன். கற்பதற்கு வயது தடையில்லை! அவள் சேர்ந்திருப்பது DM
(oncology). அது சரி! “Daily an apple keeps the doctor away.” என்ற பழமொழி சரிதான் என்று எண்ணிக்கொண்டேன்.
உண்மையிலேயே நான் சாப்பிட்ட ‘தினம் ஒரு ஆப்பிள்’ வேலை செய்துவிட்டது!. It kept
Doctor (my daughter) away from me.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக