விருத்தமாயிரம் கவித்துவப் பயிற்சி
(மா மா காய், மா,மா,காய்)
தாய்மையைப் போற்றுவோம்!
பலதும் உறவு
இருந்தாலும் ~~பக்கத்
துணையாய் நிற்பதுவும் நலமாய் நாமும் வாழ்வதிலே ~~நாட்டம் மிகவே கொண்டதுவும் நிலத்தில் வாழும் உறவினிலே ~~நிம்மதி நமக்குத்
தருவதுவும் உலகில் நமது கண்முன்னே ~~உலவும் தெய்வம்
தாய்தானே!
தாய்மை ஒன்றே
உலகினிலே ~~தனித்து நிற்கும்
உறவாகும்! தூய்மை உண்மை
நல்லொழுக்கம் ~~துணிவைக் கற்றுக் கொடுப்பாளே! வாய்மை வழியில் நாம்நின்று ~~வாழும் வகையைக்
கற்பிப்பாள்! தாய்மை என்னும் தூய்மையான ~~தகவைப் போற்றி வணங்கிடுவாய்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக