“விதி வலியது”
விதியின் வலியது வேறில்லை யென்றாலும் மதியதன் துணையாலே மாற்ற முயன்றால் விதியது புறமுது கிட்டோடும்! வெற்றியதுன் மிதியடியில் வந்து விரைவாய் வீழும்!
வெற்றிக்குச்சூத்திரமாம் விடாமுயற்சி கடுமுழைப்பு நெற்றியதில் எழுதியதை அதுவே மாற்றும்! தடைகளையும் உடைத் தெறியும் உன்பக்கப் படையாய் மாற்றும் தந்திரத்தைச் சொல்லித்தரும்! இடையிலே வந்திடலாம் தோல்விகள் பலவும் இடையூறாய் எண்ணிடாது படியாய்க் கொண்டு படைநகர்த்தி முன்னேறு வெற்றி நோக்கி! கடைசியிலே வெற்றிக்கனி வந்து சேரும்! ~~செல்லமுத்து பெரியசாமி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக